முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கொள்ளை: மன்னர் குடும்பத்துக்கு தொடர்பா?

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஏப் 20 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க  புதையல் இருப்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க புதையலை மதிப்பிடும் பணியும் நடைபெற்றது. 

இதற்காக சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தது. அந்த குழுவினர் இந்த தங்க புதையலை மதிப்பீடு செய்தனர். இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் பத்மநாபசுவாமி கோவில் தங்க புதையல் பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக வக்கீல் பாலகிருஷ்ணன் என்பவரை நியமித்தது. அவரும் கடந்த 2 மாதங்களாக பத்மநாபசுவாமி கோவிலில் ஆய்வு நடத்தினார். திருவிதாங்கோடு மன்னர் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து கோவிலில் உள்ள பொக்கிஷங்கள் பற்றி விவரம் சேகரித்தார். 

இது தொடர்பான அறிக்கையை வக்கீல் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள தங்க புதையல்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை மாற்றி வைத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ஆய்வின் போது பத்மநாபசுவாமி கோவிலுக்குள் தங்கமுலாம் பூசும் கருவி ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மன்னர் குடும்பத்தினர் பத்மநாபபுரம் கோவில் சொத்துக்களை தங்கள் சொத்துக்களாக கருதி செய்ய கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்களை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். 

மன்னர் குடும்பத்தினர் கோவில் விவகாரங்களில் இனி தலையிட கூடாது. கோவில் நிர்வாகத்தை கவனிக்க புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டும். பத்மநாபசுவாமி கோவில் விவகாரத்தில் கேரள அரசு மெத்தனப்போக்கை கடைபிடிப்பதால் கோவில் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ் படை நியமிக்க வேண்டும். தங்க புதையலை கடத்த முயன்றதை தடுத்த சில ஊழியர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. கோவில் குளத்தில் ஒரு ஆண் பிணம் மர்மமான முறையில் மிதந்துள்ளது. மேலும் கோவில் பெண் ஊழியரை கோவிலுக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது என்பது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக வரும் 23ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் அரசு சார்பில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தேவசம்போர்டு மந்திரி சிவகுமார் தெரிவித்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago