முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக வக்கீலுக்கு வெட்டு: திமுகவினர் 5 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப். 21 - சென்னை ராயப்பேட்டையில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக வக்கீலுக்கு வெட்டப்பட்டார். அவரது உயிர் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை தொடர்பாக திமுகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை 118_வது வார்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் வெளியானது. உடனே அ.தி.மு.க. நிர்வாகிகள் பந்தல்பாபு, வக்கீல் சிவகுமார், பழனிச்சாமி, மணி உள்பட பலர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வினோத் என்பவரை பிடித்தனர். உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவரை ஒப்படைத்தனர்.

இதையறிந்ததும் அந்த பகுதியில் தி.மு.க.வினர் திரண்டனர். இதையடுத்து அ.தி.மு.க.வினருக்கும் தி.மு.க. வினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது வக்கீல் சிவகுமாரை அரிவாளால் வெட்டினார்கள். தலையில் வெட்டுபட்ட சிவக்குமார் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு ராயப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கலைந்து போக செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான போலீசார் வழக்கு பதிவு செய்து தி.மு.க.வை சேர்ந்த யுவராஜ், ஜெயகுமார், கருணாதங்கம், வினோத், கேசவன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கும்பலாக வந்து தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தி.மு.க. பகுதி செயலாளர் மா.ப.அன்புதுரையை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெட்டுபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வக்கீல் சிவகுமாரை மத்திய சென்னை வேட்பாளர் விஜயகுமார் ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தார்.

இதே போல் கீழ்க்கட்டளை பல்லவன் நகரில் உள்ள மகளிர் குழுவினருக்கு அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. வினர் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அ.தி.மு.க. வினர் குற்றம் சாட்டினர்.

வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க கோரியும், தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்லாவரம் நகராட்சி துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், 15_வது வார்டு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் 50_க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பல்லாவரம் பெரியதெரு சாலையில் திடீர் மறியலில் <ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

இது குறித்து கவுன்சிலர் ஞானசேகரன் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago