முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தினர் சென்னை வந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 21 - தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 24_ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமான அல்லது கண்காணிக்க தகுந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 500 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது.

பதட்டமாக கருதப்படும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உள்ள?ர் போலீசாருக்கு பதில் சிறப்பு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் <டுபடுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக 135 கம்பெனி துணை ராணுவப் படையை தமிழகத்துக்கு அனுப்பும்படி தமிழக தேர்தல் கமிஷன் கேட்டு இருந்தது. இதில் ஏற்கனவே 2 கட்டமாக 32 கம்பெனி ராணுவத்தினர் தமிழகம் வந்து இருந்தனர்.

மற்றவர்கள் இன்றைக்குள் வந்து சேருவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியிருந்தார்.

இதன்படி 3_வது கட்டமாக உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலத்தில் இருந்து 485 துணை ராணுவத்தினர் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து இறங்கினர். இதேபோல் 89 ராணுவத்தினர் எழும்பூர் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.

இவர்களில் சிலர் இன்றே கடலூர், விழுப்புரம், புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் திருச்சி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். நேற்று மாலையிலும் துணை ராணுவத்தினர் சென்னை வருந்தனர். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்