முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகையை எதிர்க்கும் வில்லன்கள்: தொகுதிவாசிகள் சுவாரசியம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

பட்ணா, ஏப்.21 - பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி நடிகையான ரீனா ராணியை மூன்று ‘வில்லன்கள்’எதிர்த்துப் போட்டியிடுவதாக தொகுதிவாசிகள் சுவாரசியமாக பேசி வருகின்றனர். 

பிஹாரின் மஹராஜ்கன்ச் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போஜ்புரி நடிகை ரீனா ராணி (40) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பியான பிரபுநாத் சிங் களத்தில் உள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோரஞ்சன் சிங் தூமலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மைத்துனரான சாது யாதவ் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் 3 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இது குறித்து  ரீனா ராணி கூறியதாவது , ‘தொகுதிவாசிகள் இப்படி பேசுவது உண்மைதான். இந்த வில்லன்களிடம் இருந்து மக்கள் தப்ப வேண்டுமெனில் கதாநாயகியான எனக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும். பொதுவாக திரைப்படத்தின் முடிவில் வில்லன்களுக்கு வெற்றி கிடைப்பது இல்லை’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago