முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., பயிற்சியாளராக பீட்டர் மோர்ஸ் மீண்டும் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஏப்.21 - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டாவது முறையாக பீட்டர் மோர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

முதன்முறையாக ஒரே நபர் இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் 2007 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலும் மோர்ஸ் இங்கிலாந்து பயிற்சியாளராகச் செயல்பட்டார். 2009-ல் கெவின் பீட்டர்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். ஆஷஸ் தொடரில் 5-0 என தோல்வியடைந்த பின் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆண்டி ஃபிளவர் நீக்கப்பட்டார். புதிய அணியைத் தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்து பீட்டர்சனும் ஓரங்கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் பால் டவுன்டன் உறுதிபடத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்