முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து அருகே பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வெல்லிங்டன், ஏப் 21 - நியூசிலாந்து அருகே பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து அருகே பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள பங்குனா நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இதற்கிடையே கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்தில் அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.

6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 96 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம், உயிரிழப்பு போன்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் சாலமன் தீவுகளை நிலநடுக்கம் தாக்கியது. அதை தொடர்ந்து பப்புவா நியூகினியா வனாது, சாலமன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago