முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதேராவுக்கு ரூ.324 கோடி சொத்து எப்படி வந்தது? அருண்ஜெட்லி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 21 - அமெரிக்காவில் வெளியாகி வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா திடீர் பணக்காரராக மாறியது எப்படி என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

ராபர்ட் வதேரா, சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை திருமணம் செய்த காலக்கட்டத்தில் சாதாரண பணக்காரராகவே இருந்தார். 2009ம் ஆண்டு அவர் நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல் மந்திரிகள் ஆதரவுடன் அவர் அரசு நிலம் வாங்கி விற்று லாபம் சம்பாதித்தார். 

இதனால் ராபர்ட் வதேரா மீது நில மோசடி குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. 2012ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ. 250 கோடியாக இருந்தது. சில மாதங்களில் அவர் சொத்து மதிப்பு ரூ. 324 கோடியாக உயர்ந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராபர்ட் வதேரா மிக குறுகிய காலத்தில் ரூ. 74 கோடி எப்படி சம்பாதித்தார் என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பி உள்ளது. இதை பாஜக தலைவர் அருண்ஜெட்லி கையில் எடுத்துள்ளார். 

ராபர்ட் வதேரா தன் சொத்து குவிப்பு பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வதேரா காங்கிரசில் உறுப்பினராகவோ, வேட்பாளராகவோ இல்லை. பிறகு ஏன் அவர் மீது தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago