முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்: விபத்து தவிர்ப்பு

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஏப்.22 - மலேசியாவில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

166 பயணிகளுடன், நேற்று முன்தினம்  இரவு பெங்களூர் புறப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்-192 தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.56 மணியளவில் மீண்டும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. லேண்டிங் கியரில் கோளாறு இருந்த போதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இதனையடுத்து, விமானி நூர் ஆதம் ஆஸ்மி அப்துல் ரசாக்கை மலேசிய விமான போக்குவரத்து அமைச்சர் வெகுவாக பாரட்டினார். மேலும், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பயணிகளை சந்தித்துப் பேசிய அமைச்சர், விமானியின் சாதுர்யத்தை வெகுவாக பாராட்டி னார். சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மலேசிய ஏர்லைன்ஸுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்