முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: சரத்குமார்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சேலம் ஏப்.22 - விலைவாசி உயர்விற்கு மத்திய அரசுதான் காரணம் என சேலம் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார்.நேற்று மாலை சேலம் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து அவர் சேலம் பட்டக்கோவிலில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து தாதகாப்பட்டி,கொண்டலாம்பட்டி, சேலம் ஜங்சன், மஜ்ரா கொல்லப்பட்டி,இரும்பாலை,தாரமங்கலம், நங்கவள்ளி உள்பட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.-

அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு யார்? காரணம் மத்திய அரசுதான்.கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னாள் ரூ.37 க்கு விற்ற பெட்ரோல் இன்று 78 க்கு விற்பதற்கு யார்? காரணம்.பெட்ரோல் விலை உயர்வதால்தான் விலைவாசி உயர்ந்தது.காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு விஷங்களில் தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் கருணாநிதியுடன் விவாதம் செய்ய தயார்? என சவால் விடுத்துள்ளார். இதற்கு கருணாநிதி தயாராக உள்ளாரா?விவசாயிகளின் நலன்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் எம்.பி.தேர்தலில் பல கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இவையெல்லாம் சுயநல கூட்டணியாகும். திமுக மகள் கனிமொழிக்கு எம்.பி.பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் காலில் விழுந்தது. இப்போது தேர்தலுக்காக காங்கிரசுடன் கூட்டணி இல்லையென்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு. இப்போது அதை எதிர்க்கிறது.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபோது அதை தடுத்து நிறுத்த உண்ணாவிரதம் என்ற பெயரில் 1 மணி நேரம் சாப்பிடாமல் இருந்துவிட்டு கருணாநிதி நாடகம் ஆடினார்.இங்கு சேலத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் இப்போது அமைச்சர் கனவில் இருக்கிறார். அவர் அமைச்சராக வேண்டும் என்றால் முதலில் எம்.பி.யாக வேண்டும்.தேமுதிகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தது.தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். அந்த எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அவர் மக்களுக்காக என்ன? செய்தார்? சட்டமன்றத்தில் என்னதான்? பேசினார். நான், இங்குள்ள அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ.ஆகியோர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசியுள்ளோம். இவர் ஒரு முறைதான் அதுவும் நாக்கை துருத்தி பேசினார். சட்டமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள்.

தனக்கு தானே தளபதி என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸ்டாலின் சொல்கிறார். ஆகாய மார்கமாக வந்து செல்பவர்களுக்கு தமிழக மக்களின் நிலை எப்படி? தெரியும் என்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகாய மார்கமாக வந்து சென்றாலும் தமிழக மக்களின் நிலை தெரியாமல் இருந்திருந்தால் அவரை மக்கள் 3 முறை முதல்வராக ஆக்கியிருப்பார்களா?

மத்தியில் தமிழக முதல்வர் சுட்டுகின்றவர் பிரதமராக வரவும்,தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திடவும் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். சேலத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும்,தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.கே.செல்வராஜ்,மேயர் சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம்,சேலம் ஒன்றிய செயலாளர் டி.என்.வையாபுரி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வருதராஜ்,தைலான், ஏ.டி.சி.மணி,சித்தானந்தம், சமத்துவ மக்கள் கட்சி மாநகர செயலாளர் முருகேசன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவஹர், ஆத்தூர் நகர செயலாளர் நடராஜன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும்,தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்