முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமது வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள்?

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.23  : தமிழகத்தில் 24ம் தேதி அதாவது நாளை ? 39 தொகுதிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தமிழக வேட்பாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 845 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி என குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

845 வேட்பாளர்களில் 150 பேர் பட்டதாரிகள், 121 பேர் பத்தாம் வகுப்பு தேறியவர்கள்.96 வேட்பாளர்கள் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் ஆவர். 21 பேர் படிப்பறிவே இல்லாதவர்கள்.மொத்த வேட்பாளர்களில் 259 பேர் 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், 228 பேர் 31க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினர், 173 பேர் 51_ 60 வயதை கடந்தவர்கள், 61 முதல் 70 வயதுக்குட்பட்ட 103 பேர் ஆவர்.71 முதல் 80 வயதுக்குட்பட்ட 23 பேர் உள்ளன25 முதல் 30 வயதுக்குட்பட்டோர் 58 வேட்பாளர்கள் அவர்.845 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்