முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மனைவியின் பெயர் குறிப்பிடாத விவகாரம்: ஐகோர்ட்டு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 23 - சென்னை ஐகோர்ட்டில், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:_

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, யசோதா பென் என்ற பெண்ணை தனது 17__வது வயதில் திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர், சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தற்போது, குஜராத் மாநிலத்தின் 4_வது முறையாக முதல்_மந்திரி பதவியை வகித்து வருகிறார். இவர், குஜராத் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும்போது, தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் தன் மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை.

ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன் மனைவியின் பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுவில் தன்னைப் பற்றிய தகவல்களை குறிப்பிடாமல் மறைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றச்சாட்டு ஆகும்.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சம் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கலாம். நரேந்திர மோடி, சட்டசபை தேர்தலில் 4 முறை போட்டியிடும்போது, தன் மனைவியின் பெயரை வேட்புமனுக்களில் குறிப்பிடாமல் இருந்ததற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 20__ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தன் மனைவியின் பெயரை வேட்புமனுக்களில் குறிப்பிடாமல் இருந்ததற்காக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்