முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்: மோடி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.23 - பொறுப்பற்ற வாக்குமூலங்கள், அறிக்கைகளை ஆதரவாளர்கள் தவிர்க்குமாறு நரேந்திர மோடி ட்விட்டர் வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பீகாரின் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.

இதே போல், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் டோகாடியா, முஸ்லீம்கள் இந்துக்கள் வாழும் பகுதியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த இரு கருத்துகளும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மோடி தனது ட்விட்டர் வலைபக்கத்தில், "பொறுப்பற்ற வாக்குமூலங்கள், அறிக்கைகளை ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும் என கனிவோடு கேட்டுக்கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தகைய வாக்குமூலங்களை தான் ஒரு போதும் ஆதரித்ததில்லை எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாஜக நல்லாட்சி, வளர்ச்சி ஆகியனவற்றை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கட்சியின் நலம்விரும்பிகள் பெயரில் வெளியாகும் இத்தகைய அறிக்கைகளால் பிரச்சாரம் திசை திரும்புவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago