முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகாடியாவின் உரையாடல் பதிவை கோரியது ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

ராஜ்கோட், ஏப்.23 - விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய பதிவை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. 

குஜராத் மாநிலம் பாவ்நகரில் மேகானி சர்க்கிள் பகுதியில் கடந்தவாரம் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றின் தொண்டர்களிடையே தொகாடியா பேசினார். அப்போது ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் புதிதாக வீடுவாங்கியுள்ள முஸ்லிம் ஒருவர் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தாங்கள் அதிரடியாக அவரை வெளியேற்றுவோம் என்று தொகாடியா பேசியதாக ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில் தொகாடியாவின் பேச்சை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தொகாடியாவின் பேச்சி அதிர்ச்சியலிப்பது மட்டுமின்றி அவமானகரமானதாகும். இது அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. எனவே, தேர்தல் நேரத்தில் அமைதி சூழலை தொகாடியா கெடுப்பதைத் தடுப்பதுக்காக அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது. இதேபோல் தொகாடியா மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் காட்சியும் தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளது.

இதையடுத்து சம்பந்த பட்ட கூட்டத்தில் பேசிய தொகாடியாவின் உரையாடல் பதிவை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து தொகாடியாவின் பேச்சு குறித்து புகார் தொடர்பாக பாவ்நகர் போலீசார்  விசாரணையை தொடங்கியுள்ளனர். இத்தகவலை பாவ்நகர் காவல்துறை எஸ்.பி. மணீந்தர் சிங் பவார், என்ரு ஒர் செய்தியாளரிடம் தெரிவித்தார். எனினும் தொகாடியா மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. என்று அவர் கூறினார்.

இதனிடையே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் தாம் பேசவில்லை என்று பிரவீண் தொகாடியா தெரிவித்துள்ளார். தாம் கூறாத ஒரு கருத்தை ஓர் ஆங்கில நாளிதழ் வெளியிட்டது என்றும் அதை வைத்தே இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் வெளியிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தவறான செய்தியை வெளியிட்ட சம்பந்த பட்ட நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்