முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ்வானுக்கு எதிராக புகார்: தேர்தல் ஆணையம் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஏப்.23 - வேட்புமனுவில் முதல் மனைவி பெயரை மறைத்ததாக பாஜ கூட்டணி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி இந்த முறை பாஜ கூட்டணியில் சேர்ந்துள்ளது. பீகார் மாநிலம் ஹாகிபுர் தனி தொகுதியில் ராம்விலாஸ் பஸ்வான் போட்டியிடுகிறார். இவர் கடந்த வாரம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முதல் மனைவியின் பெயர் மற்றும் அவருக்குள்ள சொத்து விவரங்களை அளிக்கவில்லை என ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராம் சுந்தர் தாஸ் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து பஸ்வானின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் சார்பாக அவரது வக்கில் உமேஸ்பிசாரத் சாகி தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி பஸ்வான் தனது முதல் மனைவி ராஜ்குமாரி தேவியை கடந்த 1981 ம் ஆண்டே விவாகரத்து செய்து விட்டதாகவும். அதன்பிறகு இருவருக்கும் இடையே எந்த உறவும் இல்லை எனவும் தெரிவித்தார். விவாகரத்து உத்தரவு நகலையும் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் பஸ்வானுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்தது. 

 மேலும் , நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த பஸ்வானின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி பட்டியலில் அவரது பெயர் வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்