முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் ஜனாதிபதி மகன்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப்.23 - மேற்கு வங்க மாநிலம், ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிடும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கடும் போட்டியை எதிர்கொ ள்ளும் நிலையில் உள்ளார்.  இந்தத் தேர்தல் அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்றதும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது மகன் இந்த தொகுதியில் போட்டியிட்டு 2036 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 2009-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் பிரணாப் முகர்ஜி 1.28 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

மேற்கு வங்கம் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்தபோதும், காங்கிரஸ் தலைவர் ஆத்ரி ரஞ்சன் சவுத்திரி இந்த பகுதியை கோட்டையாக வைத்தி ருந்தார். 67 சதவீத முஸ்லிம்கள் கொண்ட  இந்தத் தொகுதியில் பா.ஜ.க.வுக்கு  2.3 சடவீதமாக இருந்த வாக்குகள் 2012-ல் 10.3 சதவீதமாக அதிகரித்தது ஆச்சரிய த்தை ஏற்படுத்தியது. எனவே அபிஜித் முகர்ஜி வெற்றிகுறித்து அரசியல் பார்வையாளர்கள்  இதை தெரிவிக் கின்றனர். புள்ளிவிவரம்தான் இப்படி என்றால் அபிஜித் மீதான மக்கள் அபிப்பிராயம் அவருக்கு பின்னடைவை  ஏற்படுத்தும் என்று  கூறப்படுகிறது. 

சபீர்பூர் என்ற கிரமத்தில் குடிநீர் பிரச்சனை, குண்டும், குழியுமான சாலை ஆகியவற்றுக்கு அவர் தீர்வு காணாததால் அந்த கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தக் கூட கிராம மக்கள் அனுமதிக்க வில்லையாம். பீடி சுற்றும் தொழிலாளர் கள் அபிஜித் முகர்ஜி மீது அதிருப்தியில் உள்ளனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள வெறுப்பு, முஸ்லிம்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் அபிஜித்தை எதிர்த்து 3 முஸ்லிம்கள் போட்டியிடுவது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. 

இந்தியா முழுவதும் மோசி அலை வீசுவதால், முஸ்லிம்கள் நிறைந்த இந்த தொகுதியில் தங்களது வெற்றி நிச்சயம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகி றார் கள். ஜாங்கிபூர் தொகுதியில் உள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் கோட்டையாக உள்ளதால் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அபிஜித் முகர்ஜி   உள்ளார். ஆனாலும் அவர் கசும் சவால்களை எதிர்நோக்கி உள்ளார்.  

          

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்