முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் உட்பட தலைவர்கள் ஓட்டு போடும் இடங்கள்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க மக்களைப் போலவே தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் நடிகர் கார்த்திக் வரை அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்களிக்கவுள்ளனர். 

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் வாக்களிக்கவுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இன்று ஓட்டுப்போடுகிறார். .

இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டு போடும் இடங்கள் வருமாறு:_

முதலமைச்சர் ஜெயலலிதா _ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் _கோபாலபுரம் 2_வது தெரு, சாரதா உயர்நிலைப்பள்ளி பிரதான கட்டிடம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள காவேரிப்பள்ளி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கொட்டிவாக்கம் பகுதி 

ஜி.கே.வாசன் _அபிராமபுரம் அரசு பள்ளிக்கூடம்.

கனிமொழி எம்.பி. _சென்னை ராதாகிருஷ்ணன் உட்லண்ட்ஸ் ரோடு எதிரே உள்ள ஸ்வென்தபா பள்ளி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ _கலிங்கப்பட்டி பள்ளிக்கூடம். .

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் _திண்டிவனம் ஸ்ரீமரகதம்பிகை உயர்நிலைப்பள்ளி. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் _அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனுனூர் கிராமம். 

மத்திய மந்திரி ப.சிதம்பரம் _காரைக்குடி அருகே கண்டனூர் விசாலாட்சி பள்ளி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago