முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ் நாடு அரசு போக்கவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம், தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகங்களை கேட்டு கொண்டது. 

அதன் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள், சென்னை கோயம்பேட்டிலிருந்து, நேற்று  மாலை முதல் இயக்கப்படுகிறது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலிருந்து 300 சிறப்பு பேருந்துகளும், மற்ற போக்குவரத்து கழங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து தேவையான பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர், வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேட்டிலிருந்து நேற்று  மாலை முதல் அதிகாலை வரை தேவையான இடங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் அதற்கேற்ப கூடுதலாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago