முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ். வசதி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.24. வாக்காளர்கள் செல்போன் மூலம் தங்கள் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் அறியும் வகையில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதியை தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிய தேர்தல் ஆணையம் எஸ்எம்எஸ் வசதியை வழங்கி உள்ளது. இந்நிலையில் டெக்ஸ்ட் வெப் (பஷ்ற்ரங்க்ஷ) எனும் தனியார் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட தகவல்கள், தேர்தல் பற்றிய செய்திகள் ஆகியவற்றை வாக்காளர்கள் அறிய வசதியாக எஸ்எம்எஸ் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிய, டிஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்ள் எனவும், வேட்பாளர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களுக்கு டிம்ண்ய்ண்ள்ற்ங்ழ்ள் என்றும், மக்களவைத் தேர்தல் பற்றிய சமீபத்திய செய்திகளுக்கு டிங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்2014 எனவும் வாக்காளர்கள் தங்கள் செல்போனில் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் டாடா டோகோமோ ஆகிய செல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த வசதியை பெறலாம். ஒரு எஸ்எம்எஸ்_க்கு ரூ.1 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்