முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச அறிவுரை

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ரேபரேலி,ஏப்.24 - தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்களின் பிரச்சினைகளை பற்றி தலைவர்கள் பேச வேண்டுமே தவிர தனிநபர்களை விமர்சித்துப் பேசக்கூடாது என பிரியங்கா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பெரேலியில் தனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பிரியங்கா பேசியதாவது:- தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் தனிநபர் தாக்குதல்களே நடைபெறுகின்றன. இது நல்ல அரசியலுக்கு ஏற்புடையது அல்ல. மக்களை திசை திருப்புவதற்காக செய்யப்படும் சதி. அனைத்து அதிகாரமும் ஒரு தனிநபரிடம் முடங்கிக் கிடக்க வேண்டுமா அல்லது மக்கள் கைகளில் அதிகாரம் அளிக்கப்பட வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ், வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது ஆனால் பாஜக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறது. இந்த தேர்தல், இந்திய தேசத்தின் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் தேர்தல். எனவே வாக்களிக்கச் செல்லும் முன்னர் எந்த மாதிரியான அரசியல் தலைமை வேண்டும் என்பதை நன்கு யோசித்துச் செல்லுங்கள். பிரிவினையை தூண்டும் மதவாத தலைமையா அல்லது அனைவரையும் சமமாக நடத்தும் அரசியல் தலைமயா? இரண்டில் எது வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்படுங்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்