முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: பாஜ-வுக்கு தொடர்பு: காங்.,

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.24 - சீக்கியர்களுக்கு எதிரான கலவரத் தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர் களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

கோப்ராபோஸ்ட் இணைய தளம் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜி வாலா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- 1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸார் பெயர்கள் மட்டும் இடம்பெறவில்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர் களின் பெயர்களும் அந்தப் பட்டி யலில் உள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல் ஏஜென்ட் டின் பெயரும் பட்டியலில் உள்ளது. அவர்களில் சிலர் வழக்கு களில் குற்றவாளிகளாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.

1984 சம்பவம் மிகவும் துயரமானது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தற்போது சண்டீகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதன் கூட்டணி கட்சியான சிரோ மணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் சிம்ரன்ஜித் கவுர், பதின்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இருவரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி.

இதை தெரிந்து கொண்ட பாஜக, சிரோமணி அகாலிதளம் தலைவர்கள் மக்களை குழப்புவதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகின்றனர். அவர்களின் வலையில் பஞ்சாப் மக்கள் விழமாட்டார்கள்.

இவ்வாறு ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்