முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க குழு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.24 - இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா அளித்த தீர்ப்பில் கூறியதாவது: சாலை விபத்துகளைத் தடுக்க பொறியியல் அமலாக்கம், கல்வி, அவசரகால பராமரிப்பு ஆகிய நான்கு நடவடிக்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதை மத்திய அரசு உருவாக்கியுள்ள நான்கு செய்ல் திட்டக் குழுக்களும் உறுதிப்படுத்த வேண்டும். சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை, சாலைப் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இழப்பீடுகள் குறித்து இக் குழுக்கள் சில பரிந்துறைகளை ஏற்றுக் கொண்டுள்ள மாநில அரசுகள் அது தொடர்பான உத்தரவை அரசிதழில் வெளியிடவேண்டும் என்று கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை அவ்வப்போது ஆராய முடியாது என்பதால், நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மூவர் குழுவை நீதிமன்றம் அமைக்கிறது. வரும் மே 15 முதல் இக்குழு செயல்படத் தொடங்கும். அதன் உறுப்பினர்களாக மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் எஸ்.சுந்தர், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நிஷி மித்தல் ஈகியோர் இடம் பெறுவர். இகு குழுவுக்கு டெல்லியில் அலுவலகம் உறுவாக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ள அனைத்துக் குழுக்களின் அறிக்கைகளை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான் குழுவிடம் அளிக்க வேண்டும்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அந்த அறிக்கை அளிக்கப்பட வேண்டும். அவற்றை நீதிபதி ராதாகிருஷ்ணன குழு ஆராய்ந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோட்டு விசாரணை நடத்தும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்