முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கெய்வ், ஏப் 24 - ரஷ்ய ஆதரவு படைகளினால் உக்ரைன் அரசியல் தலைவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய படைகளின் மீது எதிர் தாக்குதல் நடத்த உக்ரைனின் அதிபர் அலெக்சாண்டர் துர்ஷினோவ் அழைப்பு விடுத்துள்ளார். 

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிழக்கு பகுதிகளை ரஷ்ய ஆதரவு படையினர் கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து அப்பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் மீட்கும் பணி கடந்த வாரம் தோல்வி அடைந்தது. அதே போல் ஜெனிவாவில் நடைபெற்ற அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பேச்சுவார்த்தையும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. உக்ரைன் தொடர்பான பிரச்சினையில் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்த நிலையில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலில் உக்ரைன்அதிபர் துர்ஷினோவ் கட்சியின் உறுப்பினர் வினாடிமிர் ரெய்பாக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் துர்ஷினோவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யாவின் முழு ஆதரவுடன் உக்ரைனில் நடைபெறும் குற்ற செயல்களை நாம் முழு பலத்துடன் எதிர்த்து தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டும். கிழக்கு உக்ரைனில் வசிக்கும் உக்ரைனியர்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தநிலையில் உக்ரைனில் பொருளாதாரம் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு பணிகளுக்கு 3,035 கோடி ரூபாய் தொகுப்பு நிதி வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது என்று உக்ரைன் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்