முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தர் உருவத்தை வரைந்திருந்த இங்கி., பெண் வெளியேற்றம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப் 24 - இங்கிலாந்தை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தனது உடலில் புத்தர் உருவத்தை டாட்டூவாக வரைந்திருந்ததால் அவரை இலங்கை அரசு கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது.

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த விடுதலை புலிகளுக்கு எதிரான போர் கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அங்குள்ள புத்த விக்ரகங்கள், மடங்கள் உள்ளிட்டவற்றையும் சுற்றுலா தலங்களையும் பார்ப்பதற்காக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். 

இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சிங்கள மக்களின் பிரதான மதமாக புத்த மதம் உள்ளது. எனவே இலங்கை அரசு புத்த மதத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து இலங்கை காவல் துறையினர் கூறுகையில், இங்கிலாந்தை சேர்ந்த நவோமி கோல்மேன் என்பவர் தனது கையில் புத்தர் உருவத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். சிங்களர்களின் கடவுளை அவர் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழும்பின. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். விசாரணை நடத்திய நீதிபதி இலங்கை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நவோமி கோல்மேனை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் என்று தெரிவித்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்தை சேர்ந்த அந்தோணி ரெட்கிளிப் என்பவர் உடலில் புத்தர் டாட்டூ வரைந்திருந்ததற்காக இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்