முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி என்கவுன்டர் வழக்கில் மோடிக்கு எதிராக ஆதாரமில்லை

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 24 - பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தாதா சொராபுதீன் கடந்த 2005ம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது மனைவி கவ்சர் பியையும் போலீசார் எரித்து கொன்றனர். இதற்கு சாட்சியாக இருந்த சொராபுதீனின் நண்பர் பிரஜாபதி துளசிராம் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி என்கவுன்டர் செய்யப்பட்டார். சொராபுதீன் மற்றும் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த இரண்டு வழக்கிலும் பல போலீஸ் உயரதிகாரிகளுடன் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவும் சம்பந்தப்பட்டிருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. 

இந்நிலையில் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் சிபிஐ ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் சில தினங்களுக்கு முன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஆதாரமாக முதல்வர் அலுவலக ஊழியர் பராக் ஷாவுடன் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை அவர் சுட்டிக் காட்டினார். 

கபில்சிபலின் குற்றச்சாட்டுகளை சிபிஐ உயரதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்டன. எப்படி விசாரணை நடத்த வேண்டும். யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு தெரியும். இந்த வழக்கில் சிக்கிய போலீஸ் உயரதிகாரிகளின் வாக்குமூலம் அடிப்படையில் முதல்வர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. போலி என்கவுன்டர் விவகாரத்தில் மோடியை தொடர்புபடுத்தும் சந்தர்ப்ப சாட்சியங்கள் எதுவும் இல்லை. கபில்சிபல் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்