முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலமோசடி புகார் குறித்து வதேராவை விசாரிக்க கோரி வழக்கு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 24 - காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அரியானா மாநிலத்தில் நில மோசடி செய்ததாக ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வதேரா மீது புகார் தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜகவினர் பகிரங்கமாக வதேரா மீது பாய தொடங்கினர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் உமாபாரதி பேசும் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் வதேராவை சிறையில் தள்ளுவோம் என்றார். வதேராவுக்கு இவ்வளவு பணம் சேர்ந்தது எப்படி? அவர் என்ன தொழில் செய்கிறார்? அவரது தொழில் குறித்து வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். அது நாட்டிற்கு உதவும் என அருண்ஜெட்லி கிண்டலடித்திருந்தார். 

இதற்கிடையில் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் வெளியான செய்தியில் கடந்த 2008ம் ஆண்டு சில ஆயிரங்களோடு ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கிய வதேரா கடந்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மதிப்புடைய நிலங்களை வாங்கியும், விற்றும் தொழில் செய்துள்ளார் என எழுதப்பட்டிருந்தது. பாஜகவினர் தனிப்பட்ட முறையில் தனது கணவர் வதேரா மீது குற்றம் சாட்டி வருகின்றனர் என்று பிரியங்கா வேதனை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வதேரா மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் மீதான நிலமோசடி புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த வக்கீல் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்