முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 70 சிறை கைதிகள் ஓட்டு போட்டார்கள்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தகுதி உள்ள 70 கைதிகள் ஓட்டு போட்டார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டு போட பொதுமக்கள் ஆர்வமாக இருப்பதைப்போல, சிறை கைதிகளும் ஓட்டு போட ஆர்வமாக இருந்தனர். குண்டர்சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் காபிபோசா சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், ஓட்டு போட உரிமை உள்ளவர்கள் ஆகிறார்கள். எனவே தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஓட்டு போட முடியாது.

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும், ஓட்டுரிமை உள்ள கைதிகளில் 3 பெண் கைதிகள் உள்பட 70 பேர் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

திருச்சி மத்திய சிறையில் 11 கைதிகள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். வேலூரில் 3 பெண் கைதிகள் உள்பட 19 பேரும், பாளையங்கோட்டையில் 16 கைதிகளும், சேலத்தில் 3 பேரும், கோவை சிறையில் 21 கைதிகளும் வாக்களிக்க இருந்தனர்.

எந்த தொகுதியில் ஓட்டு உள்ளதோ, அந்த தொகுதி வாக்குச்சீட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்களித்தவுடன், வாக்குசீட்டுகள் சீல் வைக்கப்பட்ட தபால் மூலம், குறிப்பிட்ட தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று காலை டிபன் வழங்கப்பட்டவுடன், காலை 9 மணிக்கு மேல் வாக்குரிமை உள்ள கைதிகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு. சிறை சூப்பிரண்டு முன்னிலையில், வாக்குகளை கைதிகள் பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்