முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகவில் 5 தமிழர்கள் இழந்த செல்வாக்கை மீட்பார்களா?

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.25 - மக்களவைத் தேர்தலில் கர்நாடகத் தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக 5 தமிழர்கள் களமிறங்கியுள்ளனர். நீண்டகாலத்துக்குப் பிறகு தேசிய கட்சிகளால் நிறுத்தபட்டிருக்கும் 5 தமிழர்களும் வெற்றிப்பெற்று கர் நாடக தமிழர்களின் அரசியல் செல் வாக்கை மீட்டெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக தமிழரான ரூத் மனோரமா பெங்களூர் தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழரான‌ பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதேபோல சிக்மகளூர்- உடுப்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக விஜயகுமார் போட்டியிடுகிறார். பெங்களூர் வடக்கு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தமிழரான‌ வேலுவும், கோலார் தங்கவயல் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக தமிழரான வள்ளல் முனுசாமியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தபோதும் அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கிறார்கள். எனவே தமிழர்களின் வாக்கு வங்கி தமிழ் வேட்பாளர்களை சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

இருப்பினும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் ரூத் மனோரமாவிற்கு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வாக்கு வங்கியும், தமிழர்களின் வாக்கு வங்கியும் பெரிதும் கைகொடுக்கும். அதே போல அவர் மொழி எல்லைகளை தாண்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட சமூக சேவகி என்பதால் வெற்றி வசமாகும் என்றே எதிர்பார்க்கப்படு கிறது. அதே நேரம் அவரை எதிர்த்து போட்டியிடும் நந்தன் நிலகேனியை யும், பா.ஜ.க.பொதுசெயலாளர் அனந்த்குமாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.

பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் பாலகிருஷ்ணனுக்கு இத்தொகுதியில் இருக்கும் தமிழர் களும், ஆம் ஆத்மி கட்சியை கொண்டாடும் புதிய வாக்காளர் களும் கைகொடுக்க வாய்ப்பிருக் கிறது. இவரைப் போலவே சிக்மக ளூர் உடுப்பியில் போட்டியிடும் விஜயகுமாருக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago