முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்லூர் கே. ராஜூ - மேயர் எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டனர்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப் 25 - மதுரையில் நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் ஓட்டுப் போட்டனர். 

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று காலை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தனது மனைவி ஜெயந்தி, மகள் மற்றும் மருமகனுடன் சென்று மதுரை மீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். 

மேயர் ராஜன் செல்லப்பா, தனது மனைவி, மகன், மருமகளுடன் சென்று பசுமலையில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத தேசிக பரமாச்சார்யார் நேற்று தெற்கு சித்திரை வீதியில் உள்ள ஆயிர வைசிய மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் பைபாஸ் ரோட்டில் உள்ள அரிஸ்டோ தனியார் மருத்துவமனையில் இருந்து தனது மகன்கள் சிவசுப்பிரமணியன், சங்கர் ஆகியோரின் உதவியோடு டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஓட்டை பதிவு செய்தார். 

மதுரை மாவட்ட கலெக்டர் இல. சுப்பிரமணியன் ஏஆர் லைனில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று ஓட்டுப்போட்டார். மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம். முத்துராமலிங்கம் எம்எல்ஏ தனது மனைவி மற்றும் மகனுடன் அவனியாபுரம் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார். மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே. தமிழரசன் தனது குடும்பத்தாருடன் பதினெட்டான்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார். மேலூர் தொகுதி எம்எல்ஏ ஆர். சாமி, மில்கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று குடும்பத்தாருடன் ஓட்டுப்போட்டார். மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி தீபாவுடன் பார்க்டவுன் மருதுருக்மணி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார். மதுரை மத்திய தொகுதி அதிமுக செயலாளர் கிரம்மர்சுரேஷ் மேலப்பொன்னகரம் மீனாட்சி நடுநிலை பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி தனது குடும்பத்தாருடன் சென்று நேற்று மதுரை முத்துப்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி கண்ணனேந்தல் சேவியர் மேல்நிலைபள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார். மதுரை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம், விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரத்தினவேலு ஆகியோர் நேற்று காலையில் மதுரையில் ஓட்டுப்போட்டு விட்டு பின்னர் தொகுதிக்கு புறப்பட்டு சென்றனர். 

மதுரை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன், கண்ணனேந்தலில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியிலும், தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமார் கோச்சடை பள்ளி வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்போட்டனர். சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா ஓட்டுப்போட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் விக்கிரமன் அனுப்பானடி வாக்குசாவடியில் ஓட்டுப் போட்டார். 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago