முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் மரணம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை.1 - அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் பாதி வழியில் மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமய மலையில் 3880 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இயர்கையாக பனி லிங்கம் தோன்றும். இதனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேர்கொண்டு வருகின்றார்கல். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இரண்டு பாதைகல் வழியாக அமர்நாத்துக்கு பக்தர்கல் செல்ல காஷ்மீர் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல்தால் பாதை வழியாக செல்லும் யாத்திரை தொடங்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் புறப்பட்டனர்.

ரயில்பத்ரி அருகே பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது உ.பி. மாநில வாரணாசியை சேர்ந்த சுரேஷ் யாதவ் மற்றும் பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ன்த தாரா சிங் ஆகியோர் திடீரென உருண்டு வந்த பாறைகளில் சிக்கி உயிரிழந்தனர். சுனில் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த பக்தர்களின் உடல்கல் ஸ்ரீநகர் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். பகல்காம் பாதையில் 46 கிலோ மீட்டர் தூரத்துக்கு பனிப்படலம் உள்ளது. இதனால் இந்த பாதையில் யாத்திரை தொடங்குவது 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 10-ஆம் தேதி முடிவுக்கு வரும் என்று அமர்நாத் கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்