முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்தில் காளியம்மனுக்கு வெண்ணை சாற்றுதல் நிறுத்தம்

புதன்கிழமை, 2 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூலை 3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பத்ரகாளியம்மனுக்கு வெண்ணை சாற்றுதல் நிறுத்தப்பட்டு கோயில் சார்பில் நெய்தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆஸ்தான மண்டபத்தில் பத்ரகாளியம்மன் சிலை உள்ளது. இதில் பக்தர்கள் வெண்ணெய் சாற்றுதல் செய்து வந்தனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் வெண்ணெய் சாற்றுவது ஏலம் விடப்பட்டு கோயிலுக்கும் கனிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் வெண்ணெய் ஏலம் எடுப்பவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை கட்டாயப்படுத்தியும், தொந்தரவு செய்தும் விற்பனை செய்வதாக கோயில் நிர்வாகத்தினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தற்போது வெண்ணெய் ஏலம் நிறுத்தப்பட்டு அதற்கு பதில் கோயில் நிர்வாகம் சார்பில் அந்த இடத்தில் நெய் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி பச்சையப்பன் கூறுகையில், பத்ரகாளியம்மனுக்கு வெண்ணெய் சாற்றுவதை நிறுத்தி மீனாட்சி அம்மன் கோயிலைப் போல் அங்கு நெய் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். வெண்ணெய் விற்பனை கடந்த ஆண்டு ரூ. 8.15 லட்சத்திற்கு ஏலம் போனது. அந்த இடத்தில் தற்போது வைக்கப்பட்ட நெய் தீபத்தை கோயில் நிர்வாகமே எடுத்து நடத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கோயிலுக்கு வருவாய் 3 மடங்காக உயரும். அதே போல கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத ஸ்டால்கள் நடத்தப்பட உள்ளது. அதற்காக கோயிலுக்குள் உள்ள மடப்பள்ளியை விரிவுபடுத்தி அடுப்புகள் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்