முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்களை வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 9 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.10 - மான்களை வேட்டையாடிய வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளி்க்க கோரி, நடிகர் சல்மானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு படப்படிப்புக்காக ஜோத்பூர் சென்றிருந்த சல்மான் கான், பாதுகாக்கப்பட இனத்தை சேர்ந்த இரண்டு மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சல்மான் கான் தவிர இந்த வழக்கில் சைப் அலி கான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவானது.

இந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்