முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் முறைகேடு: ஆந்திர கவர்னரிடமும் விசாரணை

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 11 - ஹெலிகாப்டர் ப ஏர முறைகேடு தொடர்பாக முன்னாள் உளவுத்துறை இயக்குனரும், ஆந்திர மாநில தற்போதைய கவர்னருமான இ.எஸ்.எல். நரசிம்மனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது சாட்சியத்தை பதிவு செய்தனர்.

ஐதராபாத்தில் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விசாரணையில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டது குறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 360 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நரசிம்மன், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படை தலைவராக இருந்த பி.வி. வாஞ்சூ ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஏலத்தில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர்களின் பறக்கும் உயரத்தை குறைத்து அதில் சில தொழில் நுட்ப மாற்றங்கள் செய்வதற்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் எம்.கே. நாராயணன், பி.வி. வாஞ்சூ ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து அவர்களது சாட்சியத்தை பதிவு செய்தனர்.

அப்போது 2005ம் ஆண்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நரசிம்மனும் கலந்து கொண்டார். தொழில்நுட்ப மாற்றம் செய்ததற்கான காரணம் குறித்து பயனுள்ள தகவல்களை அவர் தருவார் என்று சிபிஐயிடம் இருவரும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நரசிம்மனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago