முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி மலைப் பாதையில் மண் சரிவு அபாயம்!

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஜூலை 12 - திருப்பதி மலைப்பாதையில் மழையின் போது 20 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக மலையேறுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக 1944ம் ஆண்டு திருப்பதி, திருமலை இடையே 58 வளைவுகளுடன் கூடிய முதல் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாகவே வாகனங்கள் சென்று வந்தது.

இரு வாகனங்கள் கடந்து செல்லும் போது மலையில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீர் வாகனங்கள் மீது விழுவது உண்டு. இது பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. இதையடுத்து 1969_1973ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் 2வது மலை பாதை உருவாக்கப்பட்டது. இந்த மலை பாதையில் மண்சரிவை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருந்த போதிலும் கடைசி 3 வளைவு பாதையிலும் மண்சரிவு ஏற்படுகிறது.

இந்த நிலையில் தேவஸ்தானம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறிந்தது. சாதாரண மழையில் கூட மண்சரிவு நிலவுகிறது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் நடைபாதையாக செல்லும் பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 இடங்களில் இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாறைகள் உருண்டு விழுந்தாலும் இரும்பு வேலி தடுத்து விடும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே திருப்பதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வரை வெளுத்து வாங்கியது. பக்தர்கள் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். இரவில் குளிர் வாட்டி எடுத்தது. நேற்று முன்தினம் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. கால்நடை பக்தர்கள் 10 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு டிக்கெட் பக்தர்கள் 5 மணி நேரமும் தரிசனத்துக்கு காத்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்