முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலில் சிக்கிய அதிகாரி பங்களா அங்கன்வாடியாக மாற்றம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜூலை 13 - மத்திய பிரதேச மாநில பா.ஜனதா முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் 9ம் வகுப்பு மாணவியின் கடிதத்தை ஏற்று அவளது கிராமத்துக்கு ரோடு போட உத்தரவிட்டார். தற்போது ஊழலில் சிக்கிய போலீஸ் அதிகாரி பங்களாவை பொது சொத்தாக மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழலில் சிக்கிய அந்த போலீஸ் அதிகாரி பெயர் அரவிந்த் திவாரி. இந்தூரில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்.

இதையடுத்து அவரது பங்களாவை பொது சொத்தாக மாற்றி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டார். அந்த வீட்டை அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக்கூடமாக மாற்றவும் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தனது உத்தரவு செயல்படுத்தப்பட்டதா? என்பதை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இந்தூருக்கு திடீரென்று ஆய்வு செய்தார். இது போல ஊழல் அதிகாரிகளின் பங்களா பொது சொத்தாக மாற்றப்படும். பணம் கைப்பற்றப்பட்டு ஏழைகள் நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்