முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி சட்டத்தில் மாற்றம்: சோனியா - ராகுலுக்கு சிக்கல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 13 - நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்து தொடர்பான டிரஸ்டின் பெரும்பான்மையான பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் உள்ளது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூ. 1600 கோடி சொத்துக்களை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அபகரித்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியசுவாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 7ம் தேதி சோனியா, ராகுல் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அமலாக்க பிரிவிடமும் சுப்பிரமணிய சுவாமி மனு கொடுத்தார். வருமான வரித்துறையும், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது வருமான வரி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் டிரஸ்டுகளின் பதிவு, சொத்தில் இருந்து கிடைக்கும் தனி நபர் வருமானம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ரத்து செய்ய முடியும். வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வருமான வரி புதிய சட்டத்தின் 12 ஓஏ பிரிவு நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு புதிய சிக்கல்கள் ஏற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்