முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை.13 - தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர். இல.சுப்பிரமணியன்,தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜீ 773 மாணவ, மாணவிகளுக்கு ரூ 1.24 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளையும், 834 மாணவ, மாணவிகளுக்கு ரூ.56.75 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மதிவண்டிகளையும் நேற்று (12.07.2014) வழங்கினார்.

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் கல்விக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த 2011-2012ம் கல்வியாண்டில் 123 பள்ளிகளில் 11807 மாணவர்கள் மற்றும் 11344 மாணவிகளுக்கு ரூ.37 கோடி மதிப்புள்ள மடிக்கணினி வழங்கப்பட்டது. 2012-2013ம் கல்வியாண்டில் 127 பள்ளிகளில் 11700 மாணவர்கள் மற்றும் 10248 மாணவிகளுக்கு ரூ.35.08 கோடி மதிப்புள்ள மடிக்கணினி வழங்கப்பட்டது. 2013-2014ம் கல்வியாண்டில் 132 பள்ளிகளில் 10709 மாணவர்கள் மற்றும் 11372 மாணவிகளுக்கு ரூ.35.29 கோடி மதிப்புள்ள மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.

2014-2015ம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 160 அரசு ஃ மாநகராட்சி ஃ கள்ளர் ஃ உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் எஸ்.சி பிரிவைச் சார்ந்த 2421 மாணவர்கள், 2951 மாணவியர்கள் ஆக மொத்தம் 5372 பேர்களும், பி.சி, எம்.பி.சி, டி.என்.சி பிரிவைச் சார்ந்த 10524 மாணவர்கள், 12857 மாணவியர்கள் ஆக மொத்தம் 23381 பேர்களும் மற்றும் இதர பிரிவைச் சார்ந்த 72 மாணவர்கள், 146 மாணவியர்கள் ஆக மொத்தம் 218 பேர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கு ஒரு மிதிவண்டி ரூ.3757.95 மதிப்பிலும், மாணவியர்களுக்கு ஒரு மிதிவண்டி ரூ.3662.40 மதிப்பிலும் ஆக மொத்தம் 28971 மாணவ, மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூபாய் 10,73,47,165 (ரூபாய் பத்து கோடியே எழுபத்தி மூன்று இலட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நூற்றி அறுபத்தி ஐந்து மட்டும்) மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. சென்ற ஆண்டில் இடைநிலை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 23.21 இலட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். தமிழகமெங்கும் ஆண்டுதோறும் 1 கோடியே 11 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்த 3 ஆண்டுகளில் 8,04,308 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் ரூ.63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,068 ஆகும்.

இவ்விழாவில் 428 மாணவர்களுக்கு ரூ.68,41,580 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் 345 மாணவிகளுக்கு ரூ.55,14,825 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளும், 11-ம் வகுப்பு பயிலும் 489 மாணவர்களுக்கு ரூ.32,76,925 மதிப்பிலும், 345 மாணவிகளுக்கு ரூ.23,97,750 மதிப்பிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை மாநகராட்சி துணை மேயர் .கு.திரவியம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக இந்நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி கல்வி நிறுவன செயலர் பி.அசோக்குமார் வரவேற்புரையாற்றினார். மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.புருஷோத்தமன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்