முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மோகன் வெளியிட்ட 14 புதிய அறிவிப்புகள்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.13 - கடலூர் மாவட்டம், பெரியநெசலூரில் அமைய உள்ள, புதிய தொழிற்பேட்டையில், 12.50 கோடி ரூபாயில், உட்கட்டமைப்பு வசதிகள்

மேற்கொள்ளப்படும்,'' என, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சட்டசபையில் நேற்று,முன்தினம் ( வெள்ளிக்கிழமை ) அமைச்சர் மோகன் 14 புதிய அறிவிப்புகளை, வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:-:

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் புதிய தொழிற்பேட்டைக்கு, சாலை, குடிநீர், கால்வாய், தெரு விளக்கு வசதி ஏற்படுத்த, 12.50 கோடி ரூபாய்.

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில், மைய வங்கியியல் தீர்வு மேற்கொள்ள, 1.90 கோடி ரூபாய்.

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியின், சாத்துார், சிவகாசி, அம்பத்துார் கிளைகளுக்கு புதிய கட்டடம் கட்ட, தலா, 30 லட்சம் ரூபாய்.

'சேகோசர்வ்' சங்கத்தில், பகுப்பாய்வு கூடம் ஆய்வு வசதிகள் மேம்படுத்த, 10 லட்சம் ரூபாய்.

'சேகோசர்வ்' சங்கத்தில், 50 டன் திறனுடைய, மின்னணு எடைமேடை அமைக்க, 11 லட்சம் ரூபாய்.

சென்னை தொழில் கூட்டுறவு பகுப்பாய்வு கூடம் ஆய்வகத்தில், 17 லட்சம் ரூபாய் செலவில், உயர்திறன் திரவ பகுப்பாய்வு கருவி நிறுவப்படும்.'இண்ட்கோசர்வ்' தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு, இயந்திரம் மற்றும் தளவாடம் வாங்க, கோடி ரூபாய்.

lகாக்களூர் மத்திய மின் பொருள் சோதனை கூடத்தில், சோதனை வசதிகளை மேம்படுத்த,

19 லட்சம் ரூபாய்.:தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில்வெண்கலப் பொருட்கள் தயாரிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், தொழிற்கூடம் அமைக்கப்படும்.

மதுரை ஆட்டோ மொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டை உட்புறம், 17 லட்சம் ரூபாய் செலவில், தார் சாலை அமைக்கப்படும்.சென்னை, திருவான்மியூர் டாக்டர் விக்ரம் சாராபாய் மின்னணு தொழிற்பேட்டையில் உள்ள, அடிப்படை விவர வங்கி, 1.85 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

விருத்தாசலம், அரசு பீங்கான் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 6.15 லட்சம் ரூபாய் செலவில், பீங்கான் பொருட்கள் காட்சியகம் மற்றும் தகவல் மையம் அமைக்கப்படும்.

மதுரை மாவட்டம், கப்பலுார்; கோவை மாவட்டம், குறிச்சி, ஆகிய இடங்களில் உள்ள, அரசு தொழிற்பேட்டைகளில், தலா 12.50 லட்சம் ரூபாய் செலவில், முதலுதவி மையம் மற்றும் மருந்தகம் அமைக்கப்படும்.

சென்னை, திருவான்மியூர், டாக்டர் விக்ரம் சாராபாய் மின்னணு தொழிற்பேட்டையில் செயல்படும், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின், இரண்டு கட்டடங்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் மோகன் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago