முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 தமிழக மீனவர்கள் திரும்பினர்: அமைச்சர் வரவேற்றார்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 13 - பக்ரைன் நாட்டில் பாஸ்போர்ட்டை இழந்து தத்தளித்த தமிழக மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் நேற்று சென்னை திரும்பினார்கள். அவர்களை முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்துக்கு சென்று அரசு செலவில் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

கடந்த 21.5.2014 அன்ற பக்ரைன் நாட்டில் கடற்கொள்ளையரால் கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த தாமஸ் கிளேட்டஸ் என்ற மீனவர் கோரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவருடனிருந்த 18 மீனவர்கள் தொடர்ந்து அங்குத் தங்கி மீன்பிடித் தொழில் மேற்கொள்ள விருப்பமின்றி தங்களது சொந்த ஊருக்கு திரும்பிட விரும்பினர். ஆனால், அவர்களது கடவுச் சீட்டுகள் (பாஸ்போர்ட்) அவர்களை பணியமர்த்திய படகு உரிமையாளரிடம் இருந்ததால் அவர்களால் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிட இயலாமல் பஹ்ரைன் நாட்டில் தத்தளித்தனர்.

இவ்விபரமறிந்த முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக 18 மீனவர்களின் பரிதாப நிலையினை பிரதமரிடம் 3.6.2014 அன்று அளித்த கோரிக்கை மனுவில் மேற்படி 18 மீனவர்களையும் உடனடியாக இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறும், அவர்கள் திரும்புவதற்கான செலவினை அரசே ஏற்கவேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா, மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் விளைவாக 18 மீனவர்களில், 11 மீனவர்களைக் கொண்ட முதல் குழுவினரின் கடவுச்சீட்டுகள் விடுவிக்கப்பட்டு அனைவரும் அரசு செலவில் பஹ்ரைன் நாட்டிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த 11 மீனவர்களும் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்கள்.

முதலமைச்சரின் ஆணையின்படி இந்த 11 மீனவர்களும் மீன்வளத் துறை அமைச்சர் கே .ஏ. ஜெயபால், அரசுச் செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஹ்ரைனிலிருந்து சென்னை திரும்பிய மீனவர்கள் முதல்வர் , ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்