முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாரிபாட்டர் படத்தில் நடித்த இங்கிலாந்து நடிகர் மரணம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

கேலிபோர்னியா, ஜூலை.13 - இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் டேவிட் லெஜெனோ. இவர் மிகவும் பிரபலமான ஹாரிபாட்டர் படத்தில் பெனிர்கிரே பேக் என்ற கேரக்டரில் ஓனாய் மனிதனாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஹாரிபாட்டர் படத்தின் 3 பாகங்களில் நடத்து இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மரண பள்ளத்தாக்கு எனப்படும் டெத்வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டரில் சென்று அவரது பிணத்தை மீட்டு வந்தனர். அவர் ஏன் அங்கு சென்றார். எப்படி இறந்தார் என தெரியவில்லை. தொடக்க விசாரணையில் அவர் பாலைவன பகுதியில் நீண்ட தூரம் நடை பயணம் சென்றுள்ளார். அப்போது பாலைவனத்தின் கடுமையான வெப்பம் தாங்காமல் அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப் படுகிறது.

மிகவும் உயரமான திடகாத்திரமான உடல் அமைப்பை கொண்ட டேவிட் ஸெஜெனோ நடிகராவதற்கு முன்பு தொழில் ரீதியாக குத்து சண்டை வீரர் ஆக இருந்தார்., தற்போது இவர் ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படத்தில் நடத்து முடித்துள்ளார். அது ரிலீசக்கு தயாராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்