முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஜூலை 14 - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 51 ஆயிரத்து 603 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெறுவதற்காக காலை 10 மணி வரை வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 10 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் மையத்தில் உள்ள 32 அறைகளும் நிரம்பி பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு 30 மணி நேரமானது.

அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கான 14 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 15 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ரூ. 100 க்கு வழங்கப்படும் கூடுதல் லட்டுகள் மாலை 4 மணிக்கே ஒரு லட்சம் லட்டுகளும் விற்று தீர்ந்தன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நேற்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago