முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லல்லு வாக்குமூலம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

ராஞ்சி, ஜூலை.16 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டேன் என்று லல்லு பிரசாத் வாக்குமூலம் அளித்தார்.

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரியாக இருந்த போது கால்நடைத் துறையில் ரூ.950 கோடி அளவுக்கு மாட்டூத்தீவன ஊழல் நடைபெற்றதாக லல்லுப பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணை ஜார்க்கண்ட் மாநலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவர் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் பீகார் மாநில தேவகர் மாவட்ட குருவூலத்தில் இருந்து ரூ96 லட்சத்தை முறைகேடாக பெற்றதாக லல்லு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏ.கே.ராய் முன்பு லல்லு பிரசாத் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் நான் ஒரு அப்பாவி. ஒரே குற்றச்சாட்டுக்காக என்னை எத்தனை தடவை தண்டிக்கப் போகிறீர்கள். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையும், சாட்சி ஆவணங்களும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

இந்த நிலையில் சிபிஐ என்னை குற்றவாளியாக்கி விட்டது. நான் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளேன். கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டு எழுந்த 1990-ஆண்டில் முதல்-மந்திரியாக இருந்த நான் எந்த அதிகாரியையும் அப்போது பணியிட மாற்றம் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்