முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டி அணியும் விவகாரம்: மதுரையில் சரத்குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

மதுரை, ஜூலை.16 - பாரம்பரிய உடையான வேட்டி அணிவதை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த சரத்குமார் கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை மதுரையில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். கட்சியின் நிறுவன தலைவரும், சட்டமன்ற உருப்பினருமான சரத்குமார் இதில் பங்கேற்றார். அவர் விளக்குத்தூண் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெற்கு வெளிவீதியில் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:

காமராஜர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்க்க பாடுபட்டார். அனைவரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். 100 சதவீதம் கல்வி கற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என அவர் பாடுபட்டார். அதே வழியில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் 100 சதவீத கல்வி அறிவை மாணவர்கள் பெற மடிக்கணினி, நோட்டு, புத்தகம் உள்ளிட்ட 14 வகை உபகரணங்களை வழங்கி வருகிறார். நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் சிறந்த அரசு இருக்க வேண்டும். அந்த அரசாக தமிழகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானத்தையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார் (மாநகர்), ஒத்தக்கடை கணேசன் (கிழக்கு), டாக்டர் பிரபாகரன் ( புறநகர்) மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் சரத்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு, வெளிநாடுகளில் காலைகளை வைத்து விளையாடும்போது அதனை கொன்று விடும் நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் மாடுகளை தெய்வமாக மதிக்கிறார்கள். நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதற்கு கடைவிதிக்கக் கூடாது.

வெள்ளைவேட்டி அணிவது நம் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகும், வெள்ளையன் இருக்கும் போது அவர்கள் நிர்வாக வசதிக்காக பேண்ட் சட்டை அணிந்தனர்.அதையே நாம் இன்னும் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. எனவே பாரம்பரிய உடையான வேட்டி அணிவதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. கூடிய விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காமராஜர் கல்விக்காக உழைத்தவர். அதேபோல் தமிழக முதல்-அமைச்சரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல வளர்ச்சி திட்டங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago