முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானம்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஜூலை.18 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நேற்று நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் ஆடி மாதம் 1ம் தேதி நடந்து வருகிறது. 1956ம் ஆண்டுக்கிற்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்த ஆண்டிற்கான ஆனி வார ஆஸ்தான நிகழ்ச்சி நேற்று காலை 7மணிக்கு நடந்தது. முன்னதாக அதிகாலை ஏழுமலையானின் சேதுபதி விஸ்வசேனரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலைப்ப சுவாமி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பூபால வாகனத்தில் மாடவீதிகள் வழியாக கோயில் சன்னதிக்கு வந்தன. அங்கு தங்க வாயில் எதிரே ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி, விஸ்வ சேனர் ஆகியோருக்கு வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முலங்க ஆஸ்தானத்தை நடத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பெரிய மற்றும் சிறிய ஜீயர்கள் மேலதாளங்கள் முலங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட 6 வஸ்திரங்கள் கோவிலை வந்தடைந்தது. அதில் 4 வஸ்திரங்கள் மூலவருக்கும், ஒரு வஸ்திரம் உற்சவருக்கும் ஒரு வஸ்திரம், சேனாதிபதிக்கும் சாத்தப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள அனைத்துத் துறைகளுக்கான சாவி கொத்துகள் பெறப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் முன் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டிற்கான வரவு, செலவு கணக்குகள் சுவாமிக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சேவையில் கலந்து கொண்ட பக்தர்களிடமிருந்து தலா 1ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்பட்டது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் கோவில் பெரிய ஜீயர் முன்னிலையில், ஜீயர் மடத்திலிருந்து நேற்ற காலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்