முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை 21 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றார். முதல் நாள் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு கேரள கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று முன்தினம் காலை திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றார். அங்கு அவருக்கு கேரள பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கேரள கவர்னர் ஷீலா தீட்சித், அறநிலைய துறை அமைச்சர் சிவகுமார் மற்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், கோவில் அதிகாரிகள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பட்டு வேஷ்டி, பட்டு துண்டு அணிந்தபடி கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி அங்குள்ள பத்மதீர்த்த குளத்தில் புனித நீராடினார். அதன்பிறகு பத்மநாபசுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள பத்மாவதி தாயார், நாகர், சாஸ்தா கணபதி மலை தேவதைகள் என்று ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்தார்.

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் இருந்த விலை மதிக்க முடியாத தங்க புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கோர்ட் உத்தரவுப்படி அந்த நிலவறைகள் பூட்டப்பட்டு உள்ளது. அந்த நகைகளை கணக்கெடுக்கும் ப ணிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ரகசிய நிலவறைகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியில் நின்றபடி பார்த்தார். அதன்பிறகு அது பற்றி கூறிய ஜனாதிபதி, இங்குள்ள தங்க புதையல் பற்றி தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்த்து தெரிந்து கொண்டேன். தற்போது அந்த நிலவறைகளை நேரில் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. பத்மநாபசுவாமியை தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பெரிய புண்ணியம். பத்மநாப சுவாமியின் அருள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் என்றார். ஜனாதிபதி வருகையையொட்டி பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்