முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ரூ.300 டிக்கெட் நிறுத்தம்: பக்தர்கள் வாக்குவாதம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஜூலை.22 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டதால் அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. அதிகாலை 3 முதல் மாலை 6 மணிவரை 35 ஆயிரத்து 285 பேர் தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் மையத்தில் 24 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 18மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 11 மணி வரை காத்திருந்தவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அதன்பின்னர் வருபவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் வரிசையில் காத்திருந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆவேசமடைந்தனர். காலை 8 மணி முதல் விரிசையில் காத்திருக்கும் எங்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த தேவஸ்தான துணை செயல் அலுவலர் சின்னகாருரமணா, பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கு காத்திருந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தார். அவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago