முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 5 தமிழக இளைஞர்கள்!

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.22 - ஈராக், சிரியா நாட்டுக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ராணுவத்தில் தமிழக இளைஞர்கள் 5 பேர் சேர்ந்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டின் பல்வேறு நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த லெசிமா ஜெரோஸ் மோனிஷா உள்ளிட்ட 46 நர்சுகள், இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கைப்பற்றிய இடங்களை இணைத்து தனிநாடு அறிவிப்பு வெளியிட்டனர். புதிதாக ராணுவ அமைப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். ஷியா பிரிவினர் ஆளும் பகுதியை முழுமையாக பிடிக்கும் வகையில், ராணுவத்தை பலப்படுத்த ஆட்கள் சேர்க்கும் பணியில் துவக்கி உள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து கூலி வேலைக்கு சென்று உள்ளவர்களை குறிவைத்து மூளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேர்ந்திருப்பது அவரது குடுபத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி, இவரது மனைவி ரோக்கியா செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் இவர்களது மகன் காஜா பக்ரூதீன்(37) பேசியபோது, நான் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ளேன். என்னுடன் மனைவி ஆயிஷா சித்திக் மற்றும் 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர். ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்குகின்றனர். இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் எனது எண்ணம் நிறைவேறியுள்ளது எனக் கூறியுள்ளார். உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு உஸ்மான் அலி குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

இது தொடர்பாக பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், உஸ்மான் அலி மகன் பக்ருதீன் குடும்ப வறுமை காரணமாக சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். அங்கேயே 10 வருடங்கள் தங்கி வேலை பார்த்து சிங்கப்பூர் குடி உரிமையையும் பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊருக்கு வந்தார். அப்போது அவரது குடும்பத்தினரிடம் நான் கிளர்ச்சியாளனாக மாறப்போகிறேன். அதற்கான நேரத்துக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்க வில்லை. பின்னர் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கு அவரை மூளை சலவை செய்து கிளர்ச்சியாளராக மாற்றி விட்டனர் என்றார்.

இதனிடையே இணையதள பிரசாரம் மூலம் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட இந்தியாவில் இருந்து 80 இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மேலும், பல இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்க மறைமுக நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்