முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மாநாட்டு கட்சி, காங். கூட்டணி முறிந்தது

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஜூலை 22 - ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. இதையடுத்து அந்த மாநிலத்தில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

இது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான அம்பிகாசோனி கூறியதாவது,

காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள், தொண்டர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு எதிர்வரும் ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது சொந்த பலத்துடன் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்டப் பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துவோம் அல்லது எங்களுடன் பாரம்பரியமாக கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களில் சிலரை ஆதரிப்போம்.

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி இந்த தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. முந்தைய தேர்தல்களில் கூட்டணி கட்சிகளால் காங்கிரசுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்றார் அம்பிகா சோனி. அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கவும், அதன் மூலம் மாநிலத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவும் விரும்புகிறோம் என்றார்.

முன்னதாக மாநில முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் பொறுப்பு தலைவருமான உமர் அப்துல்லா, தனது டுவிட்டர் இணையதள பகுதியில் தெரிவித்துள்ளதாவது,

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போது இதுவரையில் காங்கிரஸ் கட்சி வழங்கி வந்த ஆதரவுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதையும் அவரிடம் தெரிவித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago