முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலை உயராது

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை 22 - சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பாஜக மாநில செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை தற்போது உயர்த்துவதில்லை என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையானது வெளிநாட்டு சந்தை நிலவரத்துடன் தொடர்புடையது. எனவே அதற்கேற்றாற்போல் பெட்ரோல் விலை மாறும். ஈராக் பிரச்சினையை தொடர்ந்து பெட்ரோல் விலை சற்று அதிகரித்தது.

வருங்காலத்தில் சர்வதேச சந்தை நிலவரங்களால் கச்சா எண்ணெய் விவகாரங்களில் நமக்கு அதிர்ச்சிகள் ஏதும் இருக்காது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளினால் ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. இது நல்ல அறிகுறியாகும். டீசலுக்கான உற்பத்தி வரி குறைப்பை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு துறை உள்ளிட்ட மொத்த கொள்முதல் வாடிக்கையாளர்களுக்கான டீசல் விலை சுமார் ஒரு ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள உரத் தொழிற்சாலைகளை மீண்டும் ஏற்று நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக செயல்படாமல் இருந்ததால் இவற்றின் இயந்திர சாதனங்கள் அனைத்தையும் புதிதாக அமைத்து மீண்டும் செயல்படுத்த ரூ. 7 ஆயிரம் கோடி முதல் ரூ. 8 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago