முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானார்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை.22 - 'தி ராக்ஃபோர்ட் பைல்ஸ்', 'தி நோட்புக்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானார். அவருக்கு வயது 86.

நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை மாலை கார்னர் இறந்து கிடந்ததாக காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஜேம்ஸ் கார்னர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பெயர்பெற்றவர் ஆவார்.

1957 முதல் 1960 வரை வெளியிடப்பட்ட 'மேவரிக்' என்ற நகைச்சுவை நாடகத் தொடரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் அவர். பின்னர் அதே கதையை கொண்டு, 1994-ல் 'மேவரிக்' திரைப்படமாக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago