முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.8,391 கோடியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 22:முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி ரூ.8,391 கோடியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் திட்டம்உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும் என்று. மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

ரூ.5,000 கோடியில் எண்ணூர் அனல் மின் திட்டம் விரிவாக்கம்; ரூ.8,391 கோடியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் திட்டம்; ரூ.10,121 கோடியில் உடன்குடி அனல்மின்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.

எரிசக்தி துறை குறித்த கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது::

1. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் நான்காவது அலகில் உள்ள மின்னாக்கியின் பாதுகாப்பு அமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்பாக ரூபாய் 81 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றப்படும்.

2. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி மேட்டூர் அனல் மின் நிலையத்தின் அலகுகள் 2 மற்றும் 4, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது அலகு மற்றும் வடசென்னை அனல் மின் நிலையத்தின் 2 மற்றும் 3-வது அலகு ஆகியவற்றில் மின்னாக்கியில் உள்ள கிளர்வு அமைப்பு புதிய தொழில்நுட்பத்துடன் ரூபாய் 7.29 கோடி மதிப்பீட்டில் மாற்றப்படும்.

3. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் இரண்டாம் அலகின் மூன்று கொதிகலன் நீரேற்று இயந்திரங்கள் உயர்திறனுடன் கூடிய இயந்திரங்களாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி ரூபாய் 9.22 கோடி மதிப்பீட்டில் மாற்றப்படும்.

4. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கையாளும் அமைப்பில் உள்ள நிலக்கரியை சுமந்து செல்லும் இரண்டு நகர்த்திகள் ரூபாய் 15.48 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

5. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் உள்ள காற்று சூடாக்கி அமைப்பை புதுப்பித்து நவீனமயமாக்கும் பணிகள் ரூபாய் 13.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்தாவது அலகில் நிலக்கரி உலர்சாம்பல் அகற்றும் அமைப்பு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி ரூபாய் 10.11 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்படும்.

7. தமிழக மின் கட்டமைப்பின் மின்னழுத்தத்தை மேம்படுத்த 51 மின் தேக்கிகள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி ரூபாய் 12.74 கோடி மதிப்பீட்டில் துணைமின் நிலையங்களில் நிறுவப்படும்.

8. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி மின் ஆய்வுத் துறையின் கோட்ட அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக 27 புதிய கணினிகள், அச்சுக் கருவிகள் மற்றும் தடையில்லா மின்வழங்கும் கருவிகள் ஆகியவை சுமார் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

9. மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்வரி வசூல் செய்யும் பொறுப்பு மின் ஆய்வுத்துறையையே சார்ந்தது. இவ்வருடம் மின்வரி கணக்கினை இணையதள வழியாக செய்திட மென்பொருள் தமிழ் நாடு மின்னனு நிறுவனம் (நுடுஊடீகூ) மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி சுமார் ரூ.67.50 இலட்சத்தில் உருவாக்கப்படும்.

10. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி எரிசக்தித் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கணினிகள், அச்சுக் கருவிகள், நகலெடுக்கும் கருவிகள், தொலைநகல் அனுப்பும் கருவிகள் வாங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர். நத்தம் ஆர்.விசுவநாதன் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்